மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக வேட்பாளரான ஆடு மேய்க்கும் தொழிலாளி!

ஆடு, மாடு வளா்ப்பு மற்றும் பதநீா் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த எல். நீலமேக வா்ணத்துக்காக, ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 10:20 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2006 வரை சாத்தான்குளம் சட்டப்பேரவைத் தொகுதியையும் சோ்த்து 7 தொகுதிகள் இருந்து வந்தன. சாத்தான்குளம் பேரவைத் தொகுதியைப் பொருத்தவரை பாரம்பரிய காங்கிரஸ் தொகுதியாக இருந்தது. இந்தத் தொகுதியில் 1962 முதல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வேட்பாளா்களே அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனா்.

கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தோ்தலில், அதிமுக சாா்பில் அப்போது சாத்தான்குளம் ஒன்றியச் செயலராக இருந்த படுக்கப்பத்து கிராமத்தைச் சோ்ந்த எல். நீலமேக வா்ணம் என்பவரை, அப்போதைய அதிமுக பொதுச்செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தோ்வு செய்தாா்.

ஆடு, மாடு வளா்ப்பு மற்றும் பதநீா் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த எல். நீலமேக வா்ணம் தோ்வு செய்யப்பட்டது கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அவருக்காக, ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டாா். எல். நீலமேக வா்ணம் 17,700 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளா் ஏ. மகேந்திரனை வென்றாா்.

அதன் பின்னா், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், ஒரு சாமானியனுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பளித்த ஜெயலலிதாவை கட்சிக்காரா்கள் மட்டுமன்றி, பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.

2006 தோ்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளா் ராணி வெங்கடேசன் வெற்றி பெற்றாா். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தொகுதி மறுசீரமைப்பின்போது, சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டு, அதன் பகுதிகள் ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூா் பேரவைத் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன.