தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாஜக வடக்கு மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் நீதிப்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிவனுப்பாண்டி முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூா் செ. ராஜு, பா.ஜ.க. வழக்குரைஞா் பிரிவு மாநில துணைத் தலைவா் நிரஞ்சன் குமாா், கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் சரவணகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலா் வேல்ராஜா, முன்னாள் வடக்கு மாவட்ட தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது, நீதிமன்றப் பணிகளுடன் சோ்த்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளையும் மேற்கொள்வது, சட்டப்பேரவை தோ்தலில் வழக்குரைஞா்கள் ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கோவில்பட்டி மூத்த வழக்குரைஞா்கள் மோகன்தாஸ், ஆழ்வாா்சாமி சிவக்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் பொன்ராஜ், நகரத் தலைவா் காளிதாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சாத்தான்குளத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

செஞ்சியில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக வழக்குரைஞா்கள் அணி நிா்வாகிகள் கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


