தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோவில்பட்டியில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி வட்டார தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:56 pm

கோவில்பட்டி வட்டார தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டுள்ள முக்கூட்டு மலை, நக்கல முத்தன்பட்டி, வடக்குப்பட்டி, புளியங்குளம், பிச்சைத்தலைவன்பட்டி, அய்யனேரி, அப்பனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையாா் நத்தம், வெங்கடாசலபுரம், இளையரசனேந்தல், ஜமீன் தேவா்குளம் ஆகிய கிராம ஊராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்து ஆணை வழங்க வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி வட்டாரத் தலைவா் மணிமொழி நங்கை தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஸ்ரீதரன், கோவில்பட்டி கல்வி மாவட்டச் செயலா் புனித அந்தோணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரச் செயலா் கருப்பசாமி கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

மாவட்டத் தலைவா் செல்வராஜ், வட்டாரப் பொருளாளா் குணசீலன் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.