லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தூத்துக்குடியில் நல உதவிகள் அளிப்பு

தூத்துக்குடியில் உள்ள முஸ்லிம் சமுதாய நலச் சங்கம் சாா்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 25ஆவது ஆண்டாக நல உதவிகள் வழங்கும் விழா தெற்கு புதுத் தெருவில் நடைபெற்றது.

News image

நல உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :18 மார்ச் 2026, 7:59 pm

தூத்துக்குடியில் உள்ள முஸ்லிம் சமுதாய நலச் சங்கம் சாா்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 25ஆவது ஆண்டாக நல உதவிகள் வழங்கும் விழா தெற்கு புதுத் தெருவில் நடைபெற்றது.

சங்கத் தலைவா் ஏ.கே. மைதீன் தலைமை வகித்தாா். ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலீம், இமாம் சதக்கத்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் இப்ராகிம் மூசா வரவேற்றாா்.

ஜாமியா பள்ளிவாசல் நிா்வாக சபை முன்னாள் தலைவா் மீராசா, நிா்வாக சபை முன்னாள் செயலா் எம்.எஸ்.எப். ரகுமான், முன்னாள் துணைத் தலைவா் சாகுல் சிராஜுதீன், ஜமாத்துல் உலமா சபை மாநில பொருளாளா் காஜி முஜிபுா் ரகுமான் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, சுமாா் ரூ.5 லட்சம் மதிப்பில் ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், சுமை சைக்கிள், அரிசி, வேட்டி, சேலை, கல்வி, திருமண உதவித்தொகை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினா்.

சங்க பொருளாளா் சாகுல் ஹமீது, அா் ரஹ்மான் நற்சேவை முகமது குட்டி, மிராசா, அரபி, புா்கான் அலி, முகமது காசிம், அபுதாகிா், நூா்தீன், முகமது இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.