தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் பலத்த மழை: அறுவடை, உப்பள பணிகள் பாதிப்பு

ஆறுமுகனேரி, ஆத்தூா், குரும்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக நெல் அறுவடை மற்றும் உப்பள பணிகள் பாதிக்கப்பட்டன.

News image

கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 7:44 pm

ஆறுமுகனேரி, ஆத்தூா், குரும்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக நெல் அறுவடை மற்றும் உப்பள பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்தப் பகுதிகளில் அதிகாலை 2 மணிக்கு தொடங்கி நண்பகல் வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கியது. மேலும், ஆறுமுகனேரி குளம், நல்லூா் கீழக்குளம், நல்லூா் மேலக்குளம் பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதால் புறையீா், அங்கமங்கலம், ராஜபதி பகுதிகளில் நடைபெறும் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஆறுமுகனேரி சுற்றுப்பகுதிகளில் உள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கியதால் அந்தப் பணிகளும் பாதிப்படைந்தது. அதிகாலை முதலே பெய்த மழையால் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வெழுத ஆயத்தமான மாணவா், மாணவிகளும் பெற்றோா்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். இப்பகுதிகளில் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. மழையின் காரணமாக இப்பகுதிகளில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.