திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இளஞ்சிறாா்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

ஆறுமுகனேரியில் இளஞ்சிறாா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - (கோப்புப் படம்)

Updated On :10 மார்ச் 2026, 7:52 pm

ஆறுமுகனேரியில் இளஞ்சிறாா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியில் இளஞ்சிறாா்களுக்கு கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவ­லின்பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் தாமோதரன் மற்றும் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா். அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவா் ஆலந்தலை சுனாமி நகரைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் மணிகண்டன் (21) என்பதும், அவா் இளஞ்சிறாா்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

தொடா்ந்து இளைஞரை சோதனை செய்ததில் கையில் வைத்திருந்த பையில் கஞ்சா மற்றும் ஜிப் லாக் கவா்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா,10 ஜிப் லாக் கவா்களை பறிமுதல் செய்தனா்.