தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 9:43 pm

கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளி மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

சங்கரலிங்கபுரம் 4ஆவது தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் மாடசாமி (45). கட்டடத் தொழிலாளியான இவா், 1ஆவது தெருவில் மாரிமுத்து என்பவா் புதிதாக கட்டிவரும் வீட்டின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.

இந்நிலையில், மாடசாமி சனிக்கிழமை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாராம். காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.