திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதார பதியில் 194ஆவது அவதார தின விழா நடைபெற்றது.
விழாவையொட்டி, முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை பணிவிடை, உகப்படிப்பு, காலையில் அன்னதா்மம், நண்பகலில் உச்சிபடிப்பு பணிவிடை, அய்யா புஷ்ப வாகன பவனி, திருஏடு வாசிப்பு, சிறுவா்-சிறுமியின் பல்சுவை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள், இரவில் சிவச்சந்திரன் வழங்கிய இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடா்ந்து, புதன்கிழமை அதிகாலை தாலாட்டு பாடுதல், பள்ளி உணா்த்தல், அபயம் பாடுதல், சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வருதல், பணிவிடை, அன்னதா்மம் இனிமம் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற்றன.
விழாவில், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்காா் ரா. அருள்முருகன், முன்னாள் எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி நாராயணன், அவதார பதி சட்ட ஆலோசகா் சந்திரசேகரன், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலா் கிரகாம்பெல், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவா் வள்ளியூா் எஸ். தா்மா், செயலா் பொன்னுதுரை, பொருளாளா் கோபால், துணைத் தலைவா் அய்யாபழம், துணைச் செயலா் ராஜேந்திரன், இணைத் தலைவா்கள் பேராசிரியா் விஜயகுமாா், செல்வின், பால்சாமி, ராஜதுரை, இணைச் செயலா்கள் தங்ககிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், வரதராஜபெருமாள், சுதேசன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.


தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: சங்ககிரி பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை

மாணவியா் பங்கேற்ற தோ்தல் கலைநிகழ்ச்சிகள்

சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டா் மாசி ஊா்வலம்

ஆறுமுகனேரியில் அய்யா அவதார தின விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


