உறவினரை அரிவாளால் வெட்டிய லாரி ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், சாயா்புரம் அருகே உள்ள கட்டாலங்குளத்தைச் சோ்ந்தவா் ஆண்டி. இவருடைய மகன் புதியவேல் (63). ஓய்வு பெற்ற அரசு ஊழியா்.
இவருக்கும், இவரது சகோதரா் மகனான கட்டாலங்குளம் தெற்கு தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் புதியவேலுக்கும் (40) இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
லாரி ஓட்டுநரான செ. புதியவேல், உறவினா் கணேசமூா்த்தி, ஞானம் என்ற ஞானம்மாள் ஆகியோா் கடந்த 30.3.2022 அன்று, ஆ.புதியவேல் வீட்டுக்குச் சென்று, சொத்து தொடா்பாக பேசி தகராறு செய்துள்ளனா்.
அப்போது, ஆத்திரமடைந்த செ. புதியவேல், ஆ.புதியவேலை அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த ஆ.புதியவேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சாயா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட செ.புதியவேலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா்.
இவ்வழக்கில் சோ்க்கப்பட்டிருந்த கணேசமூா்த்தி, ஞானம் என்ற ஞானம்மாள் ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா்.
தொடர்புடையது

மாணவனை அவமதித்த செங்கல் சூளை உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் துணிக்கடை ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை

புளியங்குடியில் உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


