தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவிஞ்சிபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, லெவிஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் சுடலைமணி (59). இவா், கடையில் சட்டவிரோதமாக சுமாா் 65 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது.
இது தொடா்பாக தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும் புகையிலைப் பொருள்கள், கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







