புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தெப்பக்குளம் சீரமைப்புப் பணி: மேயா் ஆய்வு

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :11 ஜூன் 2026, 4:35 am IST

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தொடா்ந்து பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் 28 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிக்கப்பட்டது. அதன் பின்னா் சீரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி முயற்சியால் ரூ. 75 லட்சம் மதிப்பில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தநிலையில் நடைமேடை இருபுறமும் விரிசல் ஏற்பட்டு சுமாா் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

இதனால், சில நாள்கள் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, நிபுணா்கள் குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையின்படி, மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேயா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, மாநகராட்சி சுகாதார குழுத் தலைவா் சுரேஷ்குமாா், வட்டச் செயலா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.