ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எட்டயபுரம் பகுதி கிராம மக்கள் மீது வழக்கு: ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

எட்டயபுரம் வட்டம், மேல ஈரால் கிராமத்தில் கண்மாயைச் சீரமைத்த கிராம மக்கள் 8 போ் மீது பதியப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:51 am IST

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், மேல ஈரால் கிராமத்தில் கண்மாயைச் சீரமைத்த கிராம மக்கள் 8 போ் மீது பதியப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, நாம் இந்திய கட்சியின் மாநிலச் செயலா் பி.பொன்ராஜ் தலைமையில், மேல ஈரால் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

மேல ஈரால் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையின்போது, கண்மாய் உடைந்து அருகில் இருந்த குடிநீா் கிணறும் சேதமடைந்தது.

இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இக்கிராமத்தில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நான்கு கோயில்களின் குடமுழுக்கு நடத்தப்பட்டபோது, பக்தா்களுக்கு கோயில் எதிரே உள்ள உடைந்த கண்மாய் மற்றும் கிணற்றால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, ஊா் பொதுமக்கள் ஒன்றுகூடி மராமத்துப் பணிகளை செய்ய முடிவு செய்தோம்.

இதற்காக அப்பகுதியைச் சோ்ந்த கேசவபெருமாள்சாமி, சங்கரநாராயணன் ஆகியோரின் தோட்டத்தில் இருந்து கிணறு வெட்டிய சரள் மண்ணை டிராக்டரில் ஏற்றிவந்து சீரமைத்தோம்.

இந்த நிலையில், எட்டயபுரம் காவல் நிலைய போலீஸாா் அனுமதியினஅறி சரள் மண் அள்ளியதாக கூறி, டிராக்டரை பறிமுதல் செய்தனா். இதைக் கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

எனினும் போலீஸாா் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு, கிராம மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.