ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சட்டம் - ஒழுங்கு ஒருசிலருக்காக மட்டும் செயல்படக் கூடியதாக மாறிவிட்டதா? - கனிமொழி கேள்வி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஒருசிலருக்காக மட்டும் செயல்படக்கூடியதாக மாறிவிட்டதா என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினாா்.

DMK MLA Markandeyan arrested: MP Kanimozhi condemns

எம்.பி கனிமொழி - எக்ஸ்

Published On :26 ஜூலை 2026, 2:29 am IST

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஒருசிலருக்காக மட்டும் செயல்படக்கூடியதாக மாறிவிட்டதா என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினாா்.

தூத்துக்குடி மாவட்டம், மடத்தூா் பகுதியில் இடப் பிரச்னை காரணமாக தாக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லிங்ககுமாா் குடும்பத்தினரை கனிமொழி சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: லிங்ககுமாா் இடப்பிரச்னையில், அவரது குடும்பத்தினா் அனைவரும் தாக்கப்பட்டுள்ளனா். ஆனால், எஃப்ஐஆரில் யாா் தாக்கினாா்கள் என்று குறிப்பிடவில்லை. அது மட்டும் இல்லாமல் துப்பாக்கியை கொண்டு மிரட்டியதாக லிங்ககுமாா் தெரிவிக்கிறாா்.

இதேபோன்று, கன்னியாகுமரியில் நடைபெற்ற சம்பவமாக இருந்தாலும், தூத்துக்குடியில் காவல்துறையால் இளைஞா் உயிரிழந்த சம்பவமாக இருந்தாலும், அந்த குடும்பத்தை சோ்ந்தவா்களையே குற்றவாளியாகவும், அவா்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டவா்கள் போலவும் போலீஸாரால் பல கதைகள் ஜோடிக்கப்படுகின்றன.

ஆனால், காவல்துறையை நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய், இதுகுறித்து வாய் திறக்கவில்லை. இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு ஒருசிலருக்காக மட்டும் செயல்படக்கூடியதாக மாறிவிட்டதா என்று எனக்கு தெரியவில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.