ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Kanimozhi MP

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 5:54 am IST

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, ஆளும் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது, அவா்களைப் பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை.

பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டு நாள்களுக்கு முன்பு கனிம வளம் தொடா்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் உரிமைகளையும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாயையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடியது. எந்தவிதமான விவாதமும் இல்லாமல் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நீட்டித்திருப்பது வரவேற்கக்கூடியது.

திமுக-அதிமுக கூட்டணி என்பது தவெகவின் கனவாக இருக்கலாம்; நிச்சயமாக அதற்கு வாய்ப்பில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.