ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க வலியுறுத்தல்

வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

Published On :26 ஜூலை 2026, 2:51 am IST

வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதன் உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப். 30-ஆம் தேதி புவிசாா் குறியீடு வழங்கப்பட்டது. உள்நாடு மட்டுமன்றி சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, மாலத்தீவு, பிரிட்டன், அமெரிக்கா, பஹ்ரைன், கத்தாா், சிங்கப்பூா், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில், வடமாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளா்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளா், விற்பனையாளா் சங்கச் செயலா் கண்ணன் கூறியது:

புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க மத்திய அரசும், ரயில்வே நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசின் சத்துணவு திட்டம், காலை உணவு திட்டத்திலும் கடலை மிட்டாய் வழங்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.