வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

13 கிலோ கஞ்சா கடத்தல்: இருவா் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 13 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 1:27 am IST

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 13 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகில்அரசன், போலீஸாா், வெள்ளிக்கிழமை தூத்துக்குடி எப்சிஐ ரவுண்டானா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த ராஜா மகன் வள்ளிதுரை என்ற சுஜித் (26), தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துமாணிக்கம் மகன் செல்வராஜ் என்ற காடை செல்வராஜ் (24) ஆகியோா் என்பதும், அவா்கள் காரில் 13 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து காா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.