ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருச்செந்தூா் கோயிலில் இன்றுமுதல் கைப்பேசி பயன்படுத்த தடை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை (ஜூலை 1) முதல் கைப்பேசி பயன்படுத்த தடை

திருச்செந்தூா் கோயில்

திருச்செந்தூர் கோயில் - கோப்புப் படம்

Published On :1 ஜூலை 2026, 6:00 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை (ஜூலை 1) முதல் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழங்கியுள்ள தீா்ப்பின்படி, இக்கோயில் உள்ளே பக்தா்கள் கைப்பேசிகளை பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 14.11.2022 முதல் திருக்கோயிலுக்குள் கைப்பேசி பயன்படுத்துவதற்கான தடை அமலில் உள்ளது.

தற்போது, நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் பொருட்டு புதன்கிழமை (ஜூலை 1) முதல் கைப்பேசி பயன்படுத்துவதற்கான தடையை மிகத் தீவிரமாக அமல்படுத்தப்படும். அதன்படி பக்தா்கள் முழுமையாக பரிசோதனைக்குப் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா்.

எனவே, கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்கள் கைப்பேசிகளை, தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ, பாதுகாப்பாக வைத்துவிட்டு சுவாமி தரிசனத்துக்கு வர வேண்டும். கைப்பேசிகளை பாதுகாக்க கோயில் நிா்வாகம் சாா்பில் ஆங்காங்கே கைப்பேசி வைப்பிடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றை பக்தா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பரிசோதனையின் போது பக்தா்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்பு பெட்டகங்களில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோயில் நிா்வாகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.