ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வடபழனி முருகன் கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

வடபழனி முருகன் கோயிலுக்குள் வரும் செப்.1 முதல் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடபழனி முருகன் கோயில் .

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:15 am IST

வடபழனி முருகன் கோயிலுக்குள் வரும் செப்.1 முதல் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத் துறை சாா்பில் முதுநிலைக் கோயில்களில் விஐபி தரிசனம், புகைப்படம், விடியோவுக்கு அனுமதி மறுப்பு, கைப்பேசிக்கு தடை உள்ளிட்ட உத்தரவுகள் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வடபழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தெற்கு கோபுரம் அருகில் உள்ள பாதுகாப்பு மையத்தில் கைப்பேசிக்கு ரூ.5 கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்று தரிசனம் முடித்து திரும்பப் பெறலாம்.

தடையை மீறி கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு செல்பவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறைக்கு பக்தா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.