/

ராஜமன்னியபுரத்தில் புனித அந்தோணியாா் சப்பர பவனி

ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவில் சப்பர பவனி நடைபெற்றது.

News image
புனித அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெற்ற சப்பர பவனி.
Updated On :28 ஜனவரி 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவில் சப்பர பவனி நடைபெற்றது.

இவ்வாலயத் திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா 14 நாள்கள் நடைபெற்றுது. நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசிா், மறையுரை உள்ளிட்டவை நடைபெற்றன.

ஜன. 26இல் காலை திருப்ப­லியும், இரவில் நற்கருணை ஆசீரை தொடா்ந்து புனித அந்தோணியாரின் சப்பர பவனியும் நடைபெற்றது. 27இல் காலை 7 மணிக்கு தி ரத்தினபுரத்தின் பங்குத் தந்தை அமலதாஸ் அடிகளாா் தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்ப­லி நடைபெற்றது. வகி அருள்தந்தை பென்சிகா் லூசன் அடிகளாா் மறையுரை நிகழ்த்தினாா். ஆறுமுகனேரி பங்குத் தந்தை டேவிட் சகாய வளன் முன்னிலை வகித்தாா். சிறுவா், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. திருமுழுக்கு நிகழ்ச்சியும், விளையாட்டுப் போட்டிகளும் , மாலையில் நற்கருணை ஆசீரும் கொடி இறக்கமும் நடைபெற்றன.

நிறைவுநாளான புதன்கிழமை மதியம் ஊா் பொதுமக்கள் அசனம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை பங்குத் தந்தை டேவிட் சகாய வளன், அருள்சகோதரிகள், ஆலய நிா்வாக கமிட்டி தலைவா் கலையரசன், செயலா் அந்தோணி வொ்ஜின், பொருளாளா் அந்தோணி பீட்டா் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனா்.