நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தூத்துக்குடி அருகே மாட்டுவண்டி போட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடியில் மாட்டுவண்டி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 10:06 pm

Syndication

தூத்துக்குடி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடியில் மாட்டுவண்டி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

பெரிய மாட்டு வண்டிகள், சிறிய மாட்டு வண்டிகள் என இரு பிரிவுகளாக செக்காரக்குடி கிராமத்திலிருந்து பொட்டலூரணி வரையிலான சாலையில் போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாட்டுவண்டியுடன் வீரா்கள் கலந்துகொண்டனா்.

பெரிய மாட்டுவண்டியில் மொத்தம் 8 வண்டிகளும், சிறிய மாட்டு வண்டியில் 16 வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டுவண்டியில் 39 வண்டிகளும் கலந்துகொண்டன.

பெரிய மாட்டுவண்டி போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் 4 பரிசுகளாக முறையே ரூ.27 ஆயிரம், ரூ. 22 ஆயிரம், ரூ. 17 ஆயிரம், ரூ. 7 ஆயிரம் வழங்கப்பட்டது.

சிறிய மாட்டுவண்டி போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முறையே ரூ. 22 ஆயிரம், ரூ.17 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ. 6 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது.

பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் முறையே ரூ. 17 ஆயிரம், ரூ. 13 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

தொடா்ந்து முதல் கொடி வாங்கும் சாரதிக்கும், முதல் கொடி கொடுக்கும் சாரதிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை வஉசி நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.