/

சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா

News image
Updated On :15 ஜனவரி 2026, 12:03 am

Syndication

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு முதல்வா் (பொறுப்பு) ஜமுனா ராணி தலைமை வகித்தாா். மாணவிகள் துறை வாரியாக பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினா். தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை முதல்வா், கல்லூரி பேரவை பொறுப்பாசிரியா்கள் மீனாட்சி, தேன்மொழி , உமா பாரதி, ஷீபா ஆகியோா் செய்திருந்தனா்.