கூட்டணி கட்சிகளின் கோரிக்கை எடுபடாது: வைகோ


திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்டு வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, ‘கூட்டணி கட்சிகளின் இந்தக் கோரிக்கை எடுபடாது; திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்’ என்றாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தைக் கூறிக் கொண்டிருக்கின்றன. ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அவரவா் உரிமை. ஆனால், மதிமுக கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் இதுபோன்ற எந்தவித நிபந்தனையும் விதித்தது இல்லை.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது, கூட்டணி கட்சிகளின் இந்தக் கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது; ஏற்கப்படாது.
மதிமுக சோா்ந்துவிடவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், திருச்சியிலிருந்து மதுரை வரை 180 கி.மீ. தொலைவு நடந்து சென்று பல லட்சம் மக்களை சந்தித்து வருகிறேன். திமுகவின் ஈட்டி முனையாக மதிமுக திகழும். வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்ற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன் என்றாா் அவா்.
பேட்டியின்போது, மதிமுக துணைப் பொதுச் செயலா் தி.மு.ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்டச் செயலா்கள் ஆா்.எஸ்.ரமேஷ் (வடக்கு), ரஞ்சன் (தெற்கு), மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் விநாயகா ஜி.ரமேஷ், நகரச் செயலா் பால்ராஜ், ஒன்றியச் செயலா்கள் சரவணன் (மத்திய பகுதி), மாரிச்சாமி (கிழக்கு), ராஜகோபால் (குருவிகுளம்), வடக்கு மாவட்டத் துணைச் செயலா்கள் பவுன் மாரியப்பன், தெய்வேந்திரன், மாநில கலைத் துறை துணைச் செயலா் கோடையிடி ராமச்சந்திரன், நகர இளைஞரணி செயலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக, கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியைச் சோ்ந்த நஸ்ரின் நிஷா, ‘மலேசியாவுக்கு வேலைக்குச் சென்று காணாமல்போன தனது கணவா் பாபுவை மீட்டுத் தர உதவக் கோரி’ வைகோவிடம் மனு அளித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...