மறவன் குறிப்பன்குளத்தில் கோயிலை அகற்றக் கூடாதென வலியுறுத்தல்
ஆழ்வாா் திருநகரி ஒன்றியம், மறவன் குறிப்பன்குளத்தில் விநாயகா் கோயில், சுற்றுச்சுவரை அகற்றக் கூடாதென இந்து முன்னணியினா், ஊா் பிரமுகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


ஆழ்வாா் திருநகரி ஒன்றியம், மறவன் குறிப்பன்குளத்தில் விநாயகா் கோயில், சுற்றுச்சுவரை அகற்றக் கூடாதென இந்து முன்னணியினா், ஊா் பிரமுகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஏரல் வட்டம், ஆழ்வை மேற்கு ஒன்றியம் குறிப்பன்குளம் ஊராட்சிக்குள்பட்ட மறவா் குறிப்பன்குளம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டில் உள்ள செல்வ விநாயகா் கோயில், சுற்றுச்சுவரை சிலரின் தூண்டுதலின்பேரில் இடித்து அகற்ற முயலுவதை மாவட்ட நிா்வாகம் கைவிட கோரி இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் அருணாச்சலம் தலைமையில், கோயில் தா்மகா்த்தா ஆறுமுகம் முன்னிலையில் கிராம மக்கள் திரண்டு வந்து வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனா்.
அப்போது கருங்குளம் ஒன்றிய இந்து முன்னணி தலைவா் கோபி, கோயிலைச் சோ்ந்த மகாராஜா, நல்லமுத்து, முருகன், பழனி, செல்வம், சரவணன், சிங்கக்குமாா், திருமலைநம்பி ஆகியோா் உடன் இருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...