தூத்துக்குடி ஸ்பாா்க் இயக்க ஆண்டு விழா

Updated On :5 பிப்ரவரி 2026, 9:27 pm

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் ஸ்பாா்க் விழிப்புணா்வு இயக்கத்தின் 9-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
நிறுவனா்கள் வழக்குரைஞா் ஸ்வா்ணலதா, செந்தில் கண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீகேன் அறக்கட்டளையின் போக்குவரத்து விதிகள் தொடா்பான விழிப்புணா்வு பதாகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெளியிட்டாா்.
இதை, அறக்கட்டளை சாா்பில் கிறிஸ்டோபா், செந்தில் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...