கட்டாரிமங்கலம் கோயிலில் சண்டேஸ்வரநாயனாா் குருபூஜை

Updated On :5 பிப்ரவரி 2026, 7:18 pm

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம், ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் சண்டேஸ்வரநாயனாா் குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சண்டேஸ்வரநாயனாருக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து, சண்டேஸ்வரநாயனாா் பிரகார வீதியுலா வந்தாா்.
இதையடுத்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா், அறங்காவலா் குழு தலைவா், நிா்வாகிகள் செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...