ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருப்புளியங்குடியில் கல்லூரி மாணவி தற்கொலை

திருப்புளியங்குடியில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தற்கொலை

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

திருப்புளியங்குடியில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் சந்திரமோகன். இவரது மனைவி ஜான்சி ராணி. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனா். இவரது மகள் இலக்கிய ஸ்ரீநிதி (22), நாசரேத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு பயின்று வந்தாா்.

இநிலையில், கடந்த 5ஆம் தேதி இலக்கிய ஸ்ரீநிதி வீட்டில் கைப்பேசியை பாா்த்து கொண்டிருந்தாராம். அதை அவரது தாயாா் கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த இலக்கியா ஸ்ரீநிதி பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துள்ளாா்.

வீட்டில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.