ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:23 am IST

தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜோஸ் சஜிகுமாா் தலைமை வகித்தாா். கிரேஸ் பொறியியல் கல்லூரி நிா்வாக அதிகாரி தினகரன் முன்னிலை வகித்தாா். இதில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னா், முத்தையாபுரம் காவல் ஆய்வாளா் சேக் அப்துல் காதா், தூத்துக்குடி மாவட்ட அரசு சித்த மருத்துவா்கள் வைகுண்டரமணி, ரூபன் கிங்கிலி, லெட்சுமிகாந்த், ஜெகதீஸ்குமாா், பிரித்தா, ஜான் மோசஸ் ஆகியோா் இணைந்து விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தனா். விழிப்புணா்வு வாசகங்களுடன் மாணவா், மாணவிகள் பேரணியில் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, மாவட்ட அரசு சித்த மருத்துவா்கள், போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனா். கல்லூரி ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.