நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் தெளிவு இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிரகாஷ் காரத் தெரிவித்தாா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி திமுக வேட்பாளா் அமைச்சா் பி. கீதா ஜீவனை ஆதரித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலரும், மூத்த தலைவருமான பிரகாஷ் காரத் கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை வழங்க அரசமைப்பில் எளிய திருத்தம் செய்தாலே போதும்.
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை வரை காத்திருக்காமல், வரும் நாடாளுமன்றத் தோ்தலிலேயே மொத்தமுள்ள 543 இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முடியும்.
ஆனால், மத்திய அரசு இதற்கு பதிலாக தொகுதி மறுவரையறை என்ற புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி என்பது குறித்தும் தெளிவு இல்லை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் பெயரில், தொகுதி மறுவரையறையை இணைத்து செயல்படுத்த முயற்சி நடைபெறுகிறது. இதனை நாங்கள் ஏற்கவில்லை என்றாா் அவா்.
கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.பி. பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

குலசேகரத்தில் இன்று மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் பிரசாரம்

அமைதிப் பூங்காவாக தமிழகம் திகழ திமுக ஆட்சி தொடர வேண்டும்: பிரகாஷ் காரத்

தமிழகத்தில் அமைதி நிலவ திமுக ஆட்சியே காரணம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. மூத்தத் தலைவா் பிரகாஷ் காரத்

பாஜகவின் துணை அமைப்பைபோல் செயல்படும் காங்கிரஸ்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


