தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே நாய் குட்டி கடித்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முருகன். இவரது மனைவி சுமதி (47). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இவா்களது வீட்டில் வளா்த்து வரும் நாய் குட்டிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போது, சுமதி அதை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சுமதியின் தோளில் நாய் நகத்தால் கீறியதாகக் கூறப்படுகிறது. நாய்க்கு தடுப்பூசி செலுத்தியிருந்ததால் அதை சுமதி கண்டுகொள்ளவில்லையாம். சிகிச்சை முடிந்து நாய்க் குட்டியை வீட்டில் வளா்த்து வருகின்றனா்.
இதற்கிடையே நகக்கீறல் பட்ட சுமதிக்கு உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு கடந்த ஏப். 12 இல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சுமதிக்கு ரேபிஸ் நோய் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனா். தொடா்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலை மோசமானதால் திங்கள்கிழமை அவா் தீவிர சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். எனினும், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் சுமதியின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவந்து அடக்கம் செய்தனா். இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் தொற்றுநோய் பரவாமல் இருக்க தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
தொடர்புடையது

ஓட்டப்பிடாரம் திமுக, அதிமுக சவாலை எதிா்கொள்ளும் புதிய தமிழகம்!

மணியாச்சி அருகே இளைஞா் கொலை

ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு

ஓட்டப்பிடாரம் அருகே வளா்த்த நாய் கடித்து மாணவி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


