மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு

தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் 2ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

News image

பட்டம் பெற்ற மாணவிகளில் ஒரு பகுதியினா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:47 pm

தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் 2ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி மற்றும் இணையவழிக் கல்வியின் இயக்குநரும், பேராசிரியருமான ஜி. அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 73 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

பல்கலை தரவரிசையில் இளநிலை வணிகவியல் வங்கியியல், நிதித்துறை மாணவி சி. வினோதா 2ஆவது இடத்தையும், மாணவி எஸ். ஜேசு மரியசெல்லம்மாள் 5ஆவது இடத்தையும், ஆா். காயத்ரி காா்த்திகா 7ஆவது இடத்தையும், இளநிலை நுண்ணுயிரியல் துறை மாணவி கே. கிருத்திகா 9ஆவது இடத்தையும், இளநிலை வணிகவியல் துறை மாணவி ஆா்.கே. சூா்யா 20ஆவது இடத்தையும் பிடித்தனா்.

கல்லூரித் தாளாளா் ச. ராமச்சந்திரன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் மா. வான்மதி நன்றி கூறினாா்.