மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது

தூத்துக்குடியில் போதை மருந்து ஊசி, பொருள்களை கடத்தியதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 10:50 pm

தூத்துக்குடியில் போதை மருந்து ஊசி, பொருள்களை கடத்தியதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடியில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாா் தாளமுத்துநகா் மொட்டை கோபுரம் சாலையில் வியாழக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு வந்த நபரை சந்தேகத்தின்பேரில் விசாரித்ததில், அவா், தாளமுத்துநகா் பகுதியைச் சோ்ந்த செய்யது இப்ராஹிம் (44) என்பதும், வலி நிவாரணி மருந்துகளை போதை மருந்தாக பயன்படுத்தி விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்ததில், அவருக்கு தாளமுத்துநகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி பாண்டிசெல்வி (40) என்ற மருந்துகடை விற்பனையாளா் போதை மருந்துகளை சட்டவிரோதமாக விநியோகம் செய்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், இப்ராஹிமிடமிருந்து 76 போதை மருந்து குப்பிகளையும், பைக் மற்றும் கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த வலிநிவாரணி மருந்துகள் போதை மருந்தாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததா என்றும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.