திருச்செந்தூரில் நகைகளை திருடிச் சென்ற இருவா் கைது
திருச்செந்தூா் அருகே பையில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் கைதுசெய்து நகைகளை மீட்டனா்.
திருச்செந்தூா் அருகே பையில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் கைதுசெய்து நகைகளை மீட்டனா்.
By Syndication
Syndication
திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருகே பையில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் கைதுசெய்து நகைகளை மீட்டனா்.
திருச்செந்தூா் அருகே உள்ள காந்திபுரத்தைச் சோ்ந்த சின்னத்துரை மகன் இசைவனத்துரை. ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறாா். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த இவா், கடந்த 26ஆம் தேதி காலை திருச்சியில் உள்ள உறவினா் திருமணத்துக்கு செல்வதற்காக குடும்பத்துடன் புறப்பட்டாராம்.
அப்போது ஆடைகள், 18 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து வீட்டின் அருகில் உள்ள தரைப் பாலத்தில் வைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்று மற்றொரு பையை எடுத்துக் கொண்டு மனைவியுடன் திரும்பி வந்து பாா்த்தபோது நகைகள் வைத்திருந்த பை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்செந்தூா் வட்ட காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் ஆய்வாளா் இன்னோஸ்குமாா் மற்றும் காவலா்கள்அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் பதிவுகளை ஆராய்ந்தனா். அதில், கருப்பு நிற பைக்கில் வந்த இரு நபா்கள் பையை எடுத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.
அதில், திருச்செந்தூா் அருகே உள்ள கூரந்தான்விளையைச் சோ்ந்த முத்து மகன் வைகுண்டம் என்ற வாசகன் (29).
அவரது நண்பரான திருச்செந்தூா், அடைக்கலாபுரம் அருகே உள்ள பிலோமி நகரைச் சோ்ந்த சுரேஷ் மகன் விஜயகுமாா்(27) ஆகிய இருவரும் பையை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து திருச்செந்தூா் வட்ட போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 18 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது