எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

படகு இல்லை - நேரடிப் பயிற்சியுமில்லை: மீன்வளக் கல்லூரி மாணவர்கள் தவிப்பு

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில், விசைப்படகு இல்லாததால் மாணவர்கள் நேரடிப் பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:10 pm

தி. இன்பராஜ்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில், விசைப்படகு இல்லாததால் மாணவர்கள் நேரடிப் பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இங்கு 1977-ம் ஆண்டு மீன்வளக் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர், ஆராய்ச்சிப் படிப்புகள் தொடங்கப்பட்டதால் "மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்' என பெயர் மாற்றப்பட்டது. கால்நடைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த இக் கல்லூரி, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது.

மீன்வளம் குறித்து இளநிலைப் பட்டப்படிப்பு தொடங்கப்பட்ட முதல் கல்லூரி இதுவாகும். 4 ஆண்டுகள் கொண்ட மீன்வளப் பட்டப்படிப்பில் இளநிலையில் 160 மாணவர்-மாணவிகளும், முதுநிலையில் 35 மாணவர்-மாணவிகளும் படித்து வருகின்றனர்.

பல ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரி அமைக்கப்பட்டிருந்தாலும் மாணவர்-மாணவிகளுக்கு அடிப்படை வசதி சரியாக செய்து தரப்படவில்லை என கடந்தாண்டு மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன.

எனினும், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை தண்ணீர் வசதியில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், பயிற்சிகளுக்குத் தேவையான உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், மாணவர்கள் நேரடியாக கடலில் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் இருந்த விசைப்படகு பழுதானதால் பயிற்சி பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், மீன்வளம் குறித்து எழுத்தளவில் படித்தாலும், நேரடியாக கடலுக்குச் சென்று பயிற்சி பெற்றால்தான் படிப்பு முழுமையாக இருக்கும். ஆனால் இப்போது கல்லூரிக்கென தனியாக விசைப்படகு இல்லை.

மாணவர்களின் பயிற்சிக்காக 1978-ல் விசைப்படகு வாங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட அப் படகு சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதாகிவிட்டது.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அப் படகின் பெரும்பாலான உதிரி பாகங்களை சிலர் திருடிச் சென்றுவிட்டனர். இதனால் அப் படகு இப்போது கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. காட்சிப் பொருளாக மட்டுமே உள்ள அப் படகால் யாருக்கும் எவ்வித பயனுமில்லை.

வாடகை விசைப்படகு மூலம்தான் சில நேரங்களில் மாணவர்கள் கடலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பொருளாதார காரணங்களால் வாடகைக்கு விசைப்படகு ஏற்பாடு செய்வது குறைந்துவிட்டதால் மாணவர்கள் கடலுக்குச் செல்ல முடிவதில்லை.

கல்லூரி நிர்வாகம் தலையிட்டு புதிய விசைப்படகு வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, கல்லூரி நிர்வாகத்தின் தரப்பில் கூறும்போது, புதிய விசைப்படகு வாங்குவது தொடர்பாக செலவு மதிப்பீடு பெறப்பட்டு அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம்.

விரைவில் அதிநவீன வசதிகள் கொண்ட புதிய விசைப்படகு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.