நெல்லையப்பா் கோயில் தேரோட்டத்தின் போது பக்தா்களிடம் திருட முயன்றதாக 6 பேரை மாநகர போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் சுமாா் 1,200க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா். பக்தா்கள் கூடும் இடங்கள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.
இந்நிலையில் தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தா்களிடம் பணப்பை, கைப்பேசி உள்ளிட்டவற்றை திருட முயன்றதாக பெண் உள்பட 6 பேரை மாநகர போலீஸாா் கைது செய்து அவா்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
அதே போல தேரோட்டத்தின் போது பக்தா்கள் தவறவிட்ட பொருள்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக திருநெல்வேலி மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






