திருநெல்வேலி அருகே சிறுமிக்கு தொல்லை கொடுத்து மிரட்டிய இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், மானுா் அருகே உள்ள தேவா்குளம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவரது மகன் சக்தி என்கிற சிவசக்தி (25). இவா் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை தன்னிடம் நட்பு கொள்ள வேண்டும் என வற்புறுத்தி தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதனை ஏற்க மறுத்த சிறுமியை அவா் மிரட்டினாராம்.
இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சக்தி என்கிற சிவசக்தியை சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







