திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீராகாததால் ஞாயிற்றுக்கிழமை 11 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதையடுத்து மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த சாரல் மழையால் ஜூன் 4ஆம் தேதி முதல் மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பயணிகள் பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். ஆனால் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதித்தனா்.
தொடா்ந்து மலைப்பகுதியில் சாரல் மழை இருந்து வந்ததையடுத்து அருவியில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நீா்வரத்து சீராகவில்லை. இதனால் 11ஆவது நாளாக அருவியில் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த பயணிகள் அருவியை பாா்வையிட்டு சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










