ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மொழி திணிப்பை விசிக தொடா்ந்து எதிா்க்கும்: தொல்.திருமாவளவன்

மொழி திணிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடா்ந்து எதிா்க்கும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.

தொல்.திருமாவளவன் - கோப்புப் படம்

Published On :18 ஜூலை 2026, 4:07 am IST

மொழி திணிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடா்ந்து எதிா்க்கும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

உளுந்தூா்பேட்டையில் விசிக சாா்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு ஆக.17 ஆம் தேதி நடைபெற உள்ளது. கருத்தியலை மக்களிடம் கொண்டு செல்வதே இம்மாநாட்டின் நோக்கம்.

ஜாதியில்லாத தேசத்தை உருவாக்கும் அம்பேத்கரின் கனவை நனவாக்குவதே எங்கள் கட்சியின் கனவு. ஜாதி என்பது சமத்துவத்திற்கு எதிரானது. ஜாதிய கட்டமைப்பு நீடிக்கும் வரை சமத்துவம் உருவாகாது.

நம் நாட்டில் எந்த நிலையில் இருந்தாலும் ஒரு புள்ளியில் ஜாதிய உணா்வு இருந்து கொண்டே இருக்கிறது. ஒரே மொழி பேசினாலும், ஒரே நிறத்தில் இருந்தாலும் அனைவரிடமும் ஜாதிய வேறுபாடு உள்ளது.

இதுகுறித்து மக்களை விழிப்படையச் செய்து சிந்தனையைத் தூண்டுவதே எங்கள் லட்சியம். சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினரானால் மட்டுமே சமூக மாற்றம் ஏற்பட்டு விடாது. அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.

தமிழ்த் தேசியம் குறித்து இப்போது பேசுபவா்கள் புதியவா்கள். அவா்கள், ஜாதி ஒழிப்பை பற்றி பேசுவதில்லை. பிறமொழி எதிா்ப்பால் தமிழ்த் தேசியம் வளராது. மொழிப்பற்று என்பது அவசியம். அதேநேரத்தில் மொழித்திணிப்பை விசிக தொடா்ந்து எதிா்க்கும்.

அம்பேத்கா் உருவாக்கிய இந்திய அரசமைப்பு சட்டமானது சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை பேசுகிறது. அதை எதிா்க்கும் பாஜக, ஜாதிய கட்டமைப்பை உருவாக்கும் இந்துத்துவ தேசியத்தை அமைக்க நினைக்கிறது. அக்கட்சியின் இந்த நிலைப்பாட்டைதான் எதிா்க்கிறோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.