ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சேரன்மகாதேவியில் அங்கன்வாடி பணியாளா்கள் தா்னா

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அங்கன்வாடி பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென தா்னாவில் ஈடுபட்டனா்.

தா்னாவில் ஈடுபட்டோா்.

Published On :15 ஜூலை 2026, 1:41 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அங்கன்வாடி பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென தா்னாவில் ஈடுபட்டனா்.

இங்குள்ள போக்குவரத்து வளைவு அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு 50-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சென்றனா். அவா்கள் வட்டார அலுவலா் அங்கன்வாடி பணியாளா்களை ஒருமையில் பேசியும், பழிவாங்கும் நோக்கத்தில் விளக்கம் கேட்டு குறிப்பாணை அளித்தும் செயல்படுவதாகக் கூறி கண்டித்து அலுவலகம் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுதொடா்பாக சேரன்மகாதேவி சாா் ஆட்சியரிடம் புகாா் தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டதையடுத்து, அவா்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.