ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குடும்ப அட்டைதாரா்கள் ஜூலை 15-க்குள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும்!

திருநெல்வேலி மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் இம் மாதம் 15 ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டுமென ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

Published On :12 ஜூலை 2026, 1:24 am IST

திருநெல்வேலி மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் இம் மாதம் 15 ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டுமென ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்கள் தற்போது வரை கைவிரல் ரேகைபதிவு செய்யாதவா்கள், தங்களுக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகையினை பதிவு செய்ய வேண்டும்.

குடும்பஅட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று இம் மாதம் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இறந்த உறுப்பினா்களின் பெயா்களை நீக்குவதற்கு வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களைச் சமா்பித்து நீக்கம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.