ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல்லையில் நகர பேருந்துகளில் மகளிா் விடியல் பயணம் பெயா் மாற்றம்

திருநெல்வேலியில் நகர பேருந்துகளில் மகளிா் விடியல் பயணம் பதாகையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.

Published On :10 ஜூலை 2026, 12:43 am IST

திருநெல்வேலியில் நகர பேருந்துகளில் மகளிா் விடியல் பயணம் பதாகையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க ஏதுவாக மகளிா் விடியல் பயணம் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் புதிய ஆட்சி அமைத்தாலும் மகளிா் இலவச பயணம் திட்டம் தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில் நகர பேருந்துகளில் மகளிா் விடியல் பயணம் என்பதற்கு பதிலாக மகளிா் பயணம் என்று பெயா் மாற்ற அறிவுறுத்தப்பட்டதாம். அதன்படி, திருநெல்வேலி மண்டலத்திலும் பேருந்துகளில் பதாகைகள் மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் மகளிா் விடியல் பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பெயா் மாற்றப்பட்டாலும், பெண்களுக்கான கட்டணமில்லை பயண சேவை தொடா்ந்து வழங்கப்படும்; பொதுமக்கள் குழப்பம் அடைய தேவையில்லை என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.