ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசுப் பேருந்துகளில் 'விடியல்' நீக்கம்! இனி வெறும் மகளிர் பயணம்தான்!

அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றப்பட்டுள்ளது பற்றி...

Magalir Vidiyal Payanam scheme renamed on government buses

பேருந்துகளில் 'மகளிர் பயணம்' என பெயர் மாற்றம் - X

Published On :9 ஜூலை 2026, 4:04 pm IST

தமிழகத்தில் பெண்களுக்கு கட்டணமில்லா அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 'மகளிர் பயணம்' என மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பெண்கள் கட்டணமில்லாமல் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் 'மகளிர் விடியல் பயணத் திட்டம்' கொண்டு வரப்பட்டது. இதற்கு மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகும் இத்திட்டம் உள்பட முந்தைய திமுக அரசின் பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் அரசுப் பேருந்துகளில், அவர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக 'மகளிர் விடியல் பயணம்' என்று எழுதப்பட்டிருக்கும்.

'மகளிர் விடியல் பயணம்' என்ற இதன் பெயர் தற்போது 'மகளிர் பயணம்' என மாற்றப்பட்டுள்ளது. 'விடியல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலமாக இந்த திட்டத்தின் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முந்தைய திமுக அரசு கொண்டுவந்த 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரும் ’திறன் தமிழ்நாடு’ என சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Magalir Vidiyal Payanam scheme renamed on government buses

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.