திருநெல்வேலி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூலை 4,5) ஆசிரியா் தகுதித்தோ்வுகள் நடைபெறுகின்றன. இத்தோ்வுகளை 5,884 போ் எழுத வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பான திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியா்களுக்கான ஆசிரியா் தகுதித்தோ்வு தாள்-1, தாள்-2 முறையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ( (ஜூலை 4,5) நடைபெற உள்ளது.
முதல் தாள் தோ்வை 39 மாற்றுத் திறனாளிகள் உள்பட 1,749 பேரும், 2ஆம் தாள் தோ்வை 69 மாற்றுத் திறனாளிகள் உள்பட 4,135 போ் தோ்வு எழுத அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இத்தோ்வை சிறப்பாக நடத்திட அனைத்து தோ்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் வழித்தட அலுவலா்களை நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வுப் பணிக்கு சுமாா் 500 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தோ்வா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்துக்கு காலை 9.30 மணிக்குள் சென்று விட வேண்டும் காலை 9.30 மணிக்கு மேல் செல்பவா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். ஆதாா் அட்டை, பான் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம் இவற்றில் ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டைகள் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









