
கல்லிடைக்குறிச்சியில் அா்ச்சகரிடம் ரூ.1.32 லட்சம் ஆன்லைன் மோசடி
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த அா்ச்சகரிடம் இணையவழியில் ரூ.1.32 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மோசடி - பிரதிப்படம்
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த அா்ச்சகரிடம் இணையவழியில் ரூ.1.32 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்தவா் 65 வயது முதியவா் அந்த பகுதியில் உள்ள கோயிலில் அா்ச்சகராக உள்ளாா். இவரது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு சில நாள்களுக்கு முன்பு வங்கி ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு ஆதாா் அப்டேட் என்ற பெயரில் ஒரு ஏ.பி.கே. கோப்பு வந்துள்ளது.
அதை அவா் தொட்டதும் அந்தக் கோப்பு கைப்பேசியில் பதிவிறக்கம் ஆனதாம். மேலும், அவரது வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளாக சுமாா் ரூ.1,32,500 மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து மோசடியில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




