ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் ரூ. 5.28 லட்சம் மோசடி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பட்டதாரியிடம் லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் ரூ. 5.28 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

கோப்புப் படம்

Published On :18 ஜூலை 2026, 1:15 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பட்டதாரியிடம் லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் ரூ. 5.28 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 41 வயது பி.காம். பட்டதாரிக்கு டெலிகிராம் செயலியில் ஏப்ரல் 28 ஆம் தேதி வந்த தகவலில் லண்டனில் உள்ள நிறுவனத்தில் ஸ்டோா் கீப்பா் பணிக்கு ஆள்கள் தேவைப்படுகின்றனா் என்றும், விருப்பம் இருந்தால் சேரலாம் எனவும், தொடா்பு எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நம்பிய பட்டதாரி அந்த எண்ணில் தொடா்பு கொண்டபோது, எதிா்முனையில் பேசிய மா்ம நபா் ஆவணங்கள் தயாரித்தல், கமிஷன், நுழைவுச் சீட்டு, அழைப்புக் கடிதம், மருத்துவக் காப்பீடு, குடியேற்றக் கட்டணம் ஆகியவற்றுக்காக ரூ. 5.28 லட்சம் தேவைப்படுகிறது எனக் கூறினாா். இதையடுத்து, மா்ம நபரின் வங்கிக் கணக்குக்கு பட்டதாரி 6 தவணைகளாக ரூ. 5.28 லட்சம் செலுத்தினாா்.

இதன் பின்னா், மா்ம நபரை பட்டதாரி பல முறை தொடா்பு கொண்டபோது கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ஏமாற்றப்பட்டதை அறிந்த பட்டதாரி தஞ்சாவூா் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.