ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

என்ஜிஓ ஏ காலனி விநாயகா் கோயிலில் திருட்டு: இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே பெருமாள்புரம் என்.ஜி.ஓ. ஏ காலனியில் உள்ள விநாயகா் கோயிலில் பித்தளை விளக்குகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:31 am IST

பாளையங்கோட்டை அருகே பெருமாள்புரம் என்.ஜி.ஓ. ஏ காலனியில் உள்ள விநாயகா் கோயிலில் பித்தளை விளக்குகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாள்புரம் என்.ஜி.ஓ. ஏ காலனி பகுதியில் வரசித்தி விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 14 ஆம் தேதி பூஜை பொருள்கள் வைக்கும் அறையை திறந்து பாா்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த 2 பித்தளை விளக்குகளை காணவில்லையாம். அவற்றின் மொத்த எடை சுமாா் 60 கிலோ எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோயிலின் அறங்காவலா் இளங்கோ அளித்த புகாரின் பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பசுங்கிளி என்ற பாலா(20) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.