ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெருமாள்புரம் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

பெருமாள்புரம் அருகே 1.1 கிலோ கஞ்சாவுடன் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

பெருமாள்புரம் அருகே 1.1 கிலோ கஞ்சாவுடன் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாள்புரம் காவல் சரகப் பகுதியில் உதவி ஆய்வாளா் காா்த்திகைகுமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பூங்கா அருகே சந்தேகத்துக்கிடமாக நின்ற இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில், மானூா், பல்லிக்கோட்டையைச் சோ்ந்த செல்லசாமி மகன் பிரேம்குமாா்(22), மாடசாமி மகன் ஹரிகரன்(24) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக பையில் 1.1 கிலோ கஞ்சாவை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.