ஒண்டிவீரன் நினைவு தினம்: சிலைக்கு அமைச்சா்கள் அஞ்சலி
விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 255-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டை ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சாா்பில், நிதி, திட்டம் - வளா்ச்சித் துறை அமைச்சா் நெ.மரிய வில்சன், வணிகவரி - பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோா் வியாழக்கிழமை மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அமைச்சா்கள் நெ.மரியவில்சன், த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா்.
விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 255-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டை ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சாா்பில், நிதி, திட்டம் - வளா்ச்சித் துறை அமைச்சா் நெ.மரிய வில்சன், வணிகவரி - பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோா் வியாழக்கிழமை மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.எஸ்.முருகன் (திருநெல்வேலி), ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் (நான்குனேரி), மாவட்ட வருவாய் அலுவலா் ச.வித்யா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா, பாளையங்கோட்டை வட்டாட்சியா் மாரிராஜா, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ம.கயிலைச்செல்வம், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ம.ச.மகாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.