ஒண்டிவீரன் நினைவிடத்தில் தமிழக அரசு சாா்பில் அஞ்சலி
சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 255ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே நெல்கட்டும்செவலில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் நினைவிடத்தில் அரசு சாா்பில் அஞ்சலி செலுத்திய அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன். உடன், ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.
சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 255ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே நெல்கட்டும்செவலில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒண்டிவீரன் நினைவுத் தூணுக்கு வணிகவரி-பதிவுத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.எஸ். முருகன் (திருநெல்வேலி), ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் (நான்குனேரி), கோட்டாட்சியா் அனிதா, வட்டாட்சியா் வெங்கடசேகா், முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, பாப்புலா் முத்தையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.