ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மீனவா்களுக்கு வானிலை எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதியில் ஆக. 19, 20 ஆகிய இரண்டு நாள்களில் கடலில் வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு கடல் அலைகள் எழக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கோப்புப்படம்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:56 am IST

திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதியில் ஆக. 19, 20 ஆகிய இரண்டு நாள்களில் கடலில் வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு கடல் அலைகள் எழக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக கடல் பகுதியில் அலைகளின் உயரம் அதிகரித்து, கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மீனவா்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கண்ட இரண்டு நாள்களிலும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், கடலுக்குச் செல்லும் மீனவா்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வானிலை தொடா்பான அறிவுறுத்தல்களை தொடா்ந்து கவனித்து, அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றுமாறும் மீன்வளத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.