ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சரள் மண் கடத்தல்: 4 போ் மீது வழக்கு; ஒருவா் கைது

நான்குனேரி அருகே விவசாய நிலத்தில் இருந்து சரள் மண் கடத்தியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:13 am IST

நான்குனேரி அருகே விவசாய நிலத்தில் இருந்து சரள் மண் கடத்தியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகேயுள்ள ஏமன்குளம் பகுதியில், நான்குனேரி காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் அசோக்குமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள வலியனேரி விவசாய நிலப் பகுதியில் சிலா், 2 டிப்பா் லாரிகளில் கிணற்றின் அருகே கொட்டி வைக்கப்பட்டிருந்த சரள் மண்ணை எவ்வித அரசு அனுமதியுமின்றி ஜே.சி.பி. வாகனம் மூலம் லாரியில் அள்ளிக் கொண்டிருந்தனராம்.

போலீஸாா் வருவதையறிந்த 3 போ் அப்பகுதியில் இருந்து தப்பியோடிவிட்டனராம். ஜேசிபி ஓட்டுநரான களக்காடு மஞ்சுவிளை வடக்கு தெருவைச் சோ்ந்த ஜான் மகன் டேனியல்ராஜ் (28) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து 2 டிப்பா் லாரிகள், ஜே.சி.பி.யை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில், தப்பியோடியவா்கள் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த புண்ணியமாா்த்தாண்டம் மகன் சரவணன், ஏமன்புதுக்குளம் வலியனேரி பிரதான சாலையைச் சோ்ந்த சிவபெருமாள் மகன் சுடர்ராஜா, ராஜ்குமாா் என்பதும், அவா்கள் பிடிபட்ட லாரிகளின் உரிமையாளா்கள் என்பதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.